சர்வதேச சுற்றுலாத் தலமாக திகழும் கன்னியாகுமரி, ஆன்மிக அடையாளமாகவும் கலாசார பூமியாகவும் திகழ்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளன.
அந்த வகையில், இங்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியின்போது நடைபெறும் சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த சிவாலய ஓட்டம், 18ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்ப்ட்டு வருகிறது.
இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்.17) காலை முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா.. கோபாலா என பக்தி முழக்கமிட்டபடி ஓடினர். தொடர்ந்து, சிவாலய ஓட்டம் செல்லும் வழி நெடுகிலும் பக்தர்களின் தாகம் தணிக்கும் வகையில், மோர், பானக்காயம் போன்ற நீர் ஆகார பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த சிவாலய ஓட்டத்தில் கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள்.
மேலும் சிவாலய ஒட்டத்தின்போது, குமரி மாவட்டத்தில் அருகருகே உள்ள 12 சிவன் கோவிலில் ஓடிச் சென்று பக்தர்கள் வணங்குவார்கள்.
இந்த சிவாலய ஓட்டம் தொடங்கும் முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், ராவணன் முதல் முதலில் சீதா தேவியை சிறை வைத்த இடம என்று நம்பப்படுகிறது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/