சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உள்ள 10 கிலோமீட்டர் பாதையில் விரைவில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள் சென்னை முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக, போக்குவரத்து மாற்றம் நடைபெறுகிறது. இந்நிலையில் ஓ.எம்.ஆர் பகுதியில், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உள்ள 10 கிலோமீட்டர் இடத்தில் மெட்ரோ பணிகள் கூடியவிரைவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 10 கிலோமீட்டர் பாதையில் மெட்ரோ பணிகளை மேற்கொள்வதற்கான நீல நிற தடுப்புகள் வைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன. மேலும் இதில் 9 மெட்ரோ நிலையங்கள் அமையும் என்று கூறப்படுகிறது. மாதாவரம் முதல் சிறுசேரி சிப்கார்ட் வரை செல்லும் மெட்ரோ ரயில் பாதையில், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்கார்ட் வரை உள்ள 10 கிலோமீட்டரும் உள்ளடங்கும்.
இந்த 10 கிலோமீட்டர் பாதையில், வாகன நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் மெட்ரோ ரயில் பாதையை அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதமே நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.
நேருநகர் முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள 10 கிலோமீட்டர் பாதையில் இப்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த பாதையில் சாலைகளுக்கு மேலாக அமைக்கப்படும் 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளது.
சி.எம்.ஆர்.எல் சார்பாக, கிரிராஜன் பேசுகையில்” செம்மஞ்சேரி பகுதியிலும், போக்குவரத்து மாற்றத்திற்கான அனுமதியை பெற்றிருக்கிறோம். இந்த பாதையை தடுப்புகள் கொண்டு தடுத்து மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்” என்று அவர் கூறினார்.