சென்னை ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 150க்கும் மேற்பட்டோர், கடந்த பத்தாண்டுகளாக தண்ணீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அது அடுக்குமாடி குடியிருப்பு அல்லது கழிவுநீர் (சாக்கடை) இணைப்புகளுடன் இணைக்கப்படவில்லை.
"சராசரியாக, ஒவ்வொரு குடும்பமும் தண்ணீர் மற்றும் கழிவுநீரை அகற்றுவதற்கு சுமார் 3,500 செலவழிக்கிறார்கள். நாங்கள் தண்ணீர் மற்றும் கழிவுநீர் வரியையும் செலுத்தி வருகிறோம்.
நாங்கள் உதவிக்காக அரசாங்கத்தை அணுகுகிறோம், ஆனால் இதுநாள் வரை எதுவும் நடக்கவில்லை. இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களும் சிரமப்படுகிறார்கள்" என்று கிளாசிக் ரிட்ரீட்டில் வசிக்கும் கிறிஸ்டோபர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார்.
20 மாநகராட்சி வார்டுகள் மற்றும் 7 பஞ்சாயத்து யூனியன்களைக் கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் இந்த பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள்.
அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அரசு நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லாவரம் - தொரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இளைஞர்கள், முதியவர்கள் என 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil