சென்னை ஹோட்டல்கள், மால்களில் புதிய நெறிமுறைகள்: ஏ.சி அளவிலும் கட்டுப்பாடு

தமிழக அரசு ஷாப்பிங் மால்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளதால், ஷாப்பிங் மால் அல்லது ஹோட்டலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இனி மாலுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும். அதோடு, அங்கே தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும்.

shopping mall, hotels, shopping mall hotels reopened, ஷாப்பிங் மால், ஹோட்டல், புதிய நிலையான வழிகாட்டு விதிமுறைகள், standard operating procedure for mall visitors, standard operating procedure for visitors, chennai, coimbatore

தமிழக அரசு ஷாப்பிங் மால்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளதால், ஷாப்பிங் மால் அல்லது ஹோட்டலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இனி மாலுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும். அதோடு, அங்கே தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். காலணிகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

தமிழக அரசு நேற்று முன் தினம் ஊரடங்கில் சில அறிவித்தது. அதில் செப்டம்பர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. தொற்றுநோய் காலத்தில் வணிக வளாகங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக விரிவான தூய்மை பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டு வந்துள்ளனர்.

ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான நிலையான வழிக்காட்டு விதிமுறைகளின் விரிவான பட்டியலை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
அதன்படி, முகக் கவசம் அணிந்துகொள்ளுதல், குறைந்தது 6 அடி தனிமனித இடைவெளியை பராமரிப்பது, நோய் அறிகுறி இல்லாமல் இருக்க வேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக மக்களின் இயல்பான செயல்பாடுகள் அனைத்தையும் மாற்றியுள்ளது. அதனால், மக்கள் உருவாகியுள்ள ஒரு புதிய இயல்பான நடவடிக்கைக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் பல்லேடியம் ஷாப்பிங் மால்களின் மத்திய இயக்குனர் பூஜா பட்டி, ‘நேன்ஸ் பை பீனிக்ஸ்’ என்ற ஒரு ஆப்ஐ அறிமுகப்படுத்தியுள்ளார், இது கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆப் எளிதாக பாதுகாப்பை அதிகரிக்கும். இந்த ஆப்ஐ எந்த நேரத்திலும் ஷாப்பிங் மாலுக்கு சென்று ஷாப்பிங் செய்ய அனைவருக்கும் ஒரு பார்வையை அளிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் நிர்வாகம், தங்கள் சமூக ஊடக பக்கங்களில், ஷாப்பிங் மாலில் வாகனங்கள் பார்க்கிங் முதல் மால் முழுவதும் தொடர்பு இல்லாத கட்டண முறைகளை அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால் செப்டம்பர் 4 முதல் திறந்திருக்கும் என்றும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்றும் அறிவித்துள்ளது. பார்வையாளர்கள் யுனிக் மால் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும். செக்-இன் மற்றும் செக்-அவுட் நடைமுறைகளுக்கு க்யூ.ஆர் குறியீடைப் பெற ஆரோக்யா சேது ஆப்ஐ பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, கோவையில் உள்ள புரோசோன் மால் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கூறியது. வாடிக்கையாளர்கள் தங்களது மாலுக்கு வருகை தருவதற்கு முன்கூட்டியே (http://prozonemalls.com) அல்லது மாலின் நுழைவாயிலில் முன்பதிவு செய்ய வேண்டும். இது QR குறியீடு அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களுக்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விதிகள் தரமானவை என்றாலும், அனைத்து பார்வையாளர்களையும் தெர்மல் ஸ்கேனிங் செய்வது, சானிடைசர் அளிப்பது போன்ற சுகாதார அமைப்புகளை போதுமான அளவு நிறுவுவதற்கு மால் நிர்வாகங்கள் வேண்டியுள்ளன.

மால்களில் ஏர் கண்டிஷன் திறப்பதற்கு முன்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து ஏசி சாதனங்களின் வெப்பநிலை அமைப்பும் 24-30 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஈரப்பதம் 40-70 சதவீதம் என்ற அளவுக்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்களில் பெரிய அளவில் கூட்டங்கள் கூடுவது தடுக்கப்படும்போது, ​​மால்களில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் முறையான தனிமனித இடைவெளி பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். மால்கள் அவ்வப்போது உள்ளேயும் புல்வெளியிலும் மற்றும் பார்வையாளர்கள் அமர்ந்த இடத்திலும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒப்பனை அறைகளை நன்றாக கழுவ ஏண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 6 முறை கழுவ வேண்டும்.

உணவகங்களில் உள்ள இறுக்கைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தொடர்பு இல்லாத கட்டண முறைகளுக்கு மால்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மால்களில், ஒருவர் சாப்பிடு முடித்த உடனேயே சாப்பாட்டு மேசைகள் மற்றும் நாற்காலிகள் 2.5 சதவீத லைசால் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

ஹோட்டல்களுக்கு கூடுதலாக, சாமான்களை அனுப்புவதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஹோட்டலில் உள்ள அனைத்து ஊழியர்களும் அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறகளை வெளியிட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் எல்லாம் ஒரு புதிய சூழலுக்கு மாறியுள்ளது. இதை வாடிக்கையாளர்கள் ஒரு புதிய இயல்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shopping mall hotels reopened standard operating procedure for visitors

Next Story
போதை மாத்திரை விற்பனை: தமிழகத்தைச் சேர்ந்த டிவி நடிகை கைதுkannada tv serial actress anika, tv actress anika arrested for drugs tablet sales, tamil nadu anika, bangalore drugs pill sale mafia, bangalore
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com