Advertisment

கோவையில் ஒரே நாளில் 14 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: வணிகர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி வீடியோ

கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ வணிகர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
theft cctv screenshot

கோவை மாநகர ஆணையாளர் சரவண சுந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 மணி நேர ரோந்து பணிக்கு 52 இருசக்கர வாகனங்கள் சுழற்சி முறையில் சுற்றி வர உத்தரவிட்டார்.

கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ வணிகர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை மாநகர ஆணையாளர் சரவண சுந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 மணி நேர ரோந்து பணிக்கு 52 இருசக்கர வாகனங்கள் சுழற்சி முறையில் சுற்றி வர உத்தரவிட்டார். 

கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பணியில் காவல் துறையினரையும் முடிக்கி விட்டு உள்ளார். 

இந்நிலையில் கோவை மாநகர காவல் துறைக்கு சவால் விடும் வகையில் கோவை, சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி காலனியில் அடுத்து அடுத்து உள்ள ஹோட்டல், மெடிக்கல் ஷாப், ஜெராக்ஸ் கடை, கொரியர் அலுவலகம் என 14 கடைகளின் ஷட்டரின் பூட்டுகளை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. 

Advertisment
Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்து சுந்தராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

கடையில் இருந்த கல்லாப்பெட்டி மற்றும் உண்டியலில் இருந்து பணம் ஆகியவற்றை மட்டும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்று உள்ளதாகவும், பொருள்கள் எதுவும் எடுக்கவில்லை எனவும் தெரியவந்து உள்ளது.

கொள்ளை போன பணம் மொத்தம் எவ்வளவு ? வேறு ஏதேனும் பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதா..? கொள்ளையர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே நாளில் 14 கடைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் இடையே அச்சத்தையும்  அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Cctv Footage
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment