கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், கன்னட அமைப்புகள் மற்றும் பாஜகவைக் கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இன்று காலை 6 மணி துவங்கிய போராட்டம் மாலை 6 மணி வரை காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடை பெற்றன.
இந்தப் போராட்டத்தின்போது, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு பாசன நீரை திறந்து விட மறுப்பதை கண்டித்து கடை அடைப்பு, மறியல் போராட்டத்தையொட்டி திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் திருச்சி பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம். செல்வராஜ், ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் M.C, மாவட்ட செயலாளர் எஸ். சிவா, மாவட்ட பொருளாளர் சொக்கி. சண்முகம், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம்.ஆர் .முருகன், பகுதி செயலாளர்கள் பி. ராஜா, சையது அபுதாஹிர், சுரேஷ், முத்துசாமி,மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க. இப்ராஹிம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. அஞ்சுகம், தலைவர் பார்வதி, துணை தலைவர் கே. ஆயிஷா, G. ஈஸ்வரி, வை.புஷ்பம் , நிர்மலா, நதியா, ரஷ்யா பேஹம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், தரைக்கடை வியாபாரிகள், மாதர் சங்க தோழர்கள், இளைஞர், மாணவர் பெருமன்ற தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
கடை அடைப்பு போராட்டத்தில் திருச்சி மாநகரின் மையப் பகுதியான என்.எஸ்.பி ரோடு, தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் முழுமையாக கடை அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“