/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-23T090338.848.jpg)
tamil, tamil language, shops, establishments, tamil name, minister k pandirajan, tamil name board, chennai, tamil nadu, fine, english
தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில்நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கடந்த வெள்ளிக்கிழமை, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கே பாண்டியராஜன் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் வைக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது. தமிழ்நாடு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக 1948ம் ஆண்டில் வகுக்கப்பட்ட பிரிவுகள் 15 (1), (2) மற்றும் (3) படி, தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமியுடன் இதுகுறித்து கலந்தாலோசித்து அபராததொகையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.
1948ம் ஆண்டு வகுக்கப்பட்ட சட்டத்தின்படி, பெயர் பலகைகளில் 50 சதவீதம் தமிழ் இடம்பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். மற்ற மொழிகளின் விகிதம் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இறுதி ஆண்டில் உள்ள நிலையில், தமிழ் மொழியின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2010-11ம் ஆண்டில், திமுக அரசும் தனது இறுதி ஆண்டில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பேக்கரிகள் அடுமனைகளாகவும், ஹார்டுவேர் கடைகள் வன்பொருள்கள் விற்பனையாகவும் பெயர் மாற்றம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.