தமிழகத்தின் புதிய உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி.செழியன் அண்மையில் பதவியேற்றார். முன்னதாக உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி இருந்த நிலையில் அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டு இவர் பதவியேற்றார்.
இந்நிலையில், அமைச்சர் கோவி. செழியன் சென்னையில் உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன் இன்று (அக்.10) ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளுநருடன் உயர்கல்வித் துறை நட்புறவுடன் செயல்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு எப்போது சரியான பாதையில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் முதல்வர் கூறியிருப்பார். துணை வேந்தருக்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் நியமிக்க வேண்டும் எனற ஆளுநரின் கோரிக்கையை ஏற்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
முரண்பாடுகள், மோதலுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு எது நல்லதோ அது செய்யப்படும். 4,000 உதவிப் பேராசிரியர் பணிக்கான வேலைகள் நிறுத்தப்படாது அந்த தேர்வு நடத்தப்படும். 4,000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரி மாணவர்கள் மோதல்கள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மற்ற மாநிலத்தைவிட தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்தது என்பதை நிரூபிக்க வேண்டும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“