சென்னையை சேர்ந்த இளம் பெண், இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் உயர் ஆணையராக பதவி வகித்து பெருமை சேர்த்துள்ளார்.
21 வயதாகும் ஸ்ரேயா தர்மராஜன், பிரிட்டிஷ் உயர் ஆணையரகம் நடத்தும், ஒரு நாள் உயர் ஆணையராகும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டியை கடந்த 2017ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் உயர் ஆணையரகம் நடத்தி வருகிறது. இந்த போட்டியின் 7 வது வெற்றியாளராக ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் கல்லூரியில் பொலிட்டிகல் சைன்ஸ்-ல் இளங்கலைப் பட்டப் படிப்பு பயின்றுள்ளார். மும்பையில் உள்ள அரசு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் குழந்தைகள் மனநலம் மற்றும் கல்வியில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் அலக்ஸ் எலிஸ் கூறுகையில், “அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் அடிப்படையில் இங்கிலாந்து – இந்தியா உறவு பற்றி விரிவாக பேசினார். மேலும் சர்வதேச சூழலில் இளம் பெண்கள் சந்திக்கும் சிக்கலை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக ஆழமான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்” என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 26ம் தேதி இவர் இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் உயர் ஆணையராக செயல்பட்டார். டெல்லியில் உள்ள ஐநா சபையின் அலுவகலத்தில் அவர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகரான அஜய் சூட்டை சந்தித்து, இந்தியா- இங்கிலாந்து இணைந்து மேற்கொள்ளும் ஆய்வுக்கான திட்டத்தை வலுவூட்டுவது தொடர்பான ஆலோசனையில் பங்கெடுத்தார்.
இது தொடர்பாக ஸ்ரேயா தர்மராஜன் பேசுகையில் “ இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் உயர் ஆணையராக பதிவி வகித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகுந்த அனுபவம் நிறைந்த வாய்ப்பாக இது உள்ளது. பல்வேறு துறையில் சிறப்பாக செயல்படும் பெண் ஆளுமைகளுடன் உறையாடும் வாய்ப்பு கிடைத்தது” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“