சென்னையில் 7 மண்டலங்களில் அக்டோபர் 28ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள வானகரம் சந்திப்பில் பிரதான குழையினை இணைக்கும் பணிகள் நடக்கவுள்ளதால், இம்மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

சென்னையில் ஏழு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய ஏழு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil