/tamil-ie/media/media_files/uploads/2022/01/mobile-759.jpg)
சென்னையில் கமிஷனர் உத்தரவின்படி, 3 மாநகர காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அரசியல் அர்த்தத்துடன் கூடிய சமூக ஊடகப் பதிவின் காரணமாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டார், அதே நேரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரைத் தாக்கியதற்காக, இரண்டு காவலர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பூ பஜார் காவல் நிலைய எஸ்ஐ, ஜி சேகரின் சமூக வலைதள பதிவு நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து இணை ஆணையர் (வடக்கு) ஆர்.வி.ரம்யா பாரதி கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன், சமூக ஊடகத்தில் அரசியல் கருத்து பகிர்ந்த, சேகர் (55), உரிய விளக்கம் அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அவரது சமூக ஊடக பதிவு முற்றிலும், ஒரு அரசியல் கட்சிக்கு அவரது விசுவாசத்தை தெளிவாகக் காட்டுகிறது. இது ஒரு காவல்துறை அதிகாரியின் நடத்தைக்கு எதிரானது என்பதால் அவர் அதை பொதுவில் பதிவு செய்திருக்கக்கூடாது, ”என்று அந்த அதிகாரி கூறினார்.
மற்றொரு சம்பவத்தில், கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவர், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தொடர்புடைய இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதலைத் தவிர்க்க, காவல்துறையினரால் நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும் என்று உள்ளக விசாரணையில் தெரியவந்ததையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டத்தாக மேற்கு சென்னை இணை போலீஸ் கமிஷனர் எஸ்.ராஜேஸ்வரி கூறினார்.
கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர்கள் ராஜன் மற்றும் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் நஜிமா ஆகியோர் காவலர்களை முறையாக வழிநடத்தாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.