புதுச்சேரியில் ரூ. 50 கோடியில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்தை அந்த கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கும் பரிந்துரையும் அரசிடம் உள்ளது.

இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்தை அந்த கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கும் பரிந்துரையும் அரசிடம் உள்ளது.

author-image
WebDesk
New Update
Puducherry

Puducherry

புதுச்சேரியில் ரூ. 50 கோடியில் 5 ஏக்கரில் புதிய சித்த மருத்துவக்கல்லூரி இந்த நிதியாண்டில் துவங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

Advertisment

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, இ.எஸ்.ஐ மாதிரி மருத்துவமனை அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டிடத்தை அந்த கார்ப் பரேஷனிடம் ஒப்படைக்கும் பரிந்துரையும் அரசிடம் உள்ளது" என்று கூறினார்.

இந்த நிதியாண்டில் ரூ.50 கோடியில் 5 ஏக்கர் பரப்பில் சித்த மருத்துவக் கல்லுாரி கொண்டுவர உள்ளோம். அந்த கல்லுாரிக்கும் அந்த பகுதியிலேயே நிலம் ஒதுக்க ஆலோசித்து வருகிறோம். இந்த மருத்துவமனைகள், கல்லூரி வரும்போது மருத்துவ பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும். அதற்கான நிலமும் தேவைப்படுகிறது" என முதல்வர் கூறினார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: