ஸீரோ கொரோனா: சித்த மருத்துவ மையங்கள் சாதனை

கடந்த ஒரு மாதத்தில் இம்மையங்களில் சிகிச்சை பெற்று ஏறத்தாழ 1,152 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Siddha Medicine for Coronavirus treatment : zero death records in three districts

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அலோபதி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் சித்த மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சித்த மருத்துவ மையங்கள் வைக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இம்மையங்களில் சிகிச்சை பெற்று ஏறத்தாழ 1,152 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகஸ்ட் 8ம் தேதி துவங்கி, கரூரில் 397 நபர்கள், பெரம்பலூரில் 205 நபர்கள் மற்றும் அரியலூரில் 670 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுடன் இருப்பவர்களும் கூட இங்கு சிகிச்சை பெற்றனர். இங்கு சிகிச்சை பெற்றவர்கள் விரைவில் குணமடைந்துள்ளனர். மேலும் கடந்த 1 மாத சிகிச்சையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Siddha medicine for coronavirus treatment zero death records in three districts

Next Story
பசுமை வழிச்சாலையை திமுக எதிர்ப்பது ஏன்? முதல்வர் கேள்வி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com