Advertisment

சென்னையை தொடர்ந்து கோவையிலும் கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை!

200 படுக்கை வசதிகளுடன் வெங்கடலெட்சுமி திருமண மண்டபத்தில் இந்த சிகிச்சை மையம் உருவாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Siddha treatment center is ready for covid19 patients in Coimbatore

Siddha treatment center is ready for covid19 patients in Coimbatore : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சென்னையில் சித்த வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று கோவையிலும் சித்த மருத்துவ சிகிச்சை வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : மும்பை மாநகரத்திற்கு நடுவே காட்டினை உருவாக்க ஏன் விரும்புகிறார் உத்தவ் தாக்கரே?

கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே 670 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அதில் 100 படுக்கைகள் சித்த மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தனம், சித்த மருத்துவ சிகிச்சைக்கென்று தனி அரங்கம் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் வெங்கடலெட்சுமி திருமண மண்டபத்தில் சித்தா சிகிச்சைக்கு பிரத்யேகமாக 200 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சித்தா சிகிச்சை தரப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியாளர் ராஜாமணி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment