தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கையெழுத்து இயக்கத்தை தலைமைத்தாங்கும் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "மதிமுகவின் 29வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. சென்னையில் வைகோ இவ்வியக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் கோவையிலும், பொருளாளர் செந்திலதிபன் கடலூரிலும், முதன்மைச் செயலாளர் துரை வைகோ தென்சென்னையிலும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரத்திலும், துணைப் பொதுச்செயலாளர் மணி விழுப்புரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன் திருநெல்வேலியிலும், துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் குடந்தையிலும், துணைப் பொதுச்செயலாளர் ரொஹையா சேக்முகமது திருச்சியிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள். கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துகிறார்கள்", இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று முதல் ஒரு மாஹத்திற்கு மதிமுக சார்பில் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை ஒரு மாதத்திற்கு நடத்தி குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளனர்.
வைகோ தலைமையிலான கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் நல்லகண்ணு முதல் கையெழுத்துயிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil