தமிழகத்தில் ஏழை குழந்தைகளுக்கு ஆசிரியரான தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீதர் வேம்பு

ஒரு அப்பா குடிகாரர் என்றால், அவர் தன்னுடைய வருமானத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. அவருடைய குழந்தை புறக்கணிப்படும்.

 Arun Janardhanan

Silicon Valley star is now teacher in Tamil Nadu, says busy with new start-up  : உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு ஸ்ரீதர் வேம்பு என்பவர் ஜோஹோ கார்ப்பரேசனை நிறுவியவர். சிலிக்கான் வேலி நட்சத்திரமான இவரை ஃபோர்ப்ஸால் மதிப்பிடப்பட்ட இந்நிறுவனத்தின் மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் அவர் கடந்த வருடம் ஒரு அசாதாரணமான முடிவை எடுத்து தமிழகத்தில் இருக்கும் தென்காசிக்கு திரும்பி வந்தார். அவரைப் பொறுத்தவரை அவர் இந்நாட்களில் ஒரு ஆசிரியராகவே வலம் வருகிறார். வேஷ்ட்டி சட்டை அணிந்து மதலாம்பாறை பகுதியில் எளிமையாக சைக்கிளில் வலம் வருகிறார்.

6 மாதங்களுக்கு முன்பு மூன்று குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை, அவருடைய இலவச நேரத்தில் ட்யூசன் எடுக்க துவங்கினார். இப்போது 4 ஆசிரியர்கள் 52 குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர். அவர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

53 வயதான இவர் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி இலவசமாக ஊரகப் பள்ளி ஒன்றை துவங்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அப்பள்ளி இலவசமாக கல்வி, உணவு ஆகியவற்றை தருவதோடு, சான்றிதழ்களுக்கான அடிப்படையாக கருதப்படும் மதிப்பெண்கள், டிகிரிகள் அவற்றை நம்பாத ஒரு மாற்றுக் கல்வியை வழங்கும் திட்டத்தில் அவர் உள்ளார்.

இது தற்போது மிகவும் தீவிரமான செயல்பாடாக மாறியுள்ளது. நானும் பகுதி நேரம் வகுப்பெடுக்கின்றேன். இவைகளை ஒருங்கிணைத்து ஒரு மாடலை உருவாக்க முயன்று வருகிறோம். முறையான ஆவணங்களை தயாரிக்கவும், தேவையான அனுமதிகளை பெறுவதிலும் பிஸியாக இருக்கின்றேன் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இந்த பள்ளி சி.பி.எஸ். இ. அல்லது வேறெந்த வாரியத்துடன் தொடர்பு கொள்ளாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது வேம்புவின் புதிய முறைகள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில், ஜோஹோ காப்பரேசனின் ஒரு அங்கமாக உள்ள ஜோஹோ பல்கலைக்கழகம் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்ற்றும் 12ம் வகுப்புகளில் இடை நின்ற மாணவர்களை ஐ.டி. வல்லுநர்களாகவும், குழுத்தலைவர்களாகவும் மாற்றியுள்ளார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

கொரோனா தொற்று ஏற்பட துவங்கிய பின்பு தான் இந்த கிராமத்தில் சவால்கள் அதிகமானது. நடைமுறையில் இந்த குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலவில்லை. சில மாணவர்களின் பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போனகள் இருக்கின்றன ஆனால் அவைகள் மலிவானவை. எனக்கு நிறைய நேரம் இருந்தது. அதனால் நாங்கள் நடைமுறை சோதனைகளில் இறங்கினோம். அவர்களுக்கு அறிவியல், கணிம, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை கற்பித்தேன்.

கடந்த செப்டம்பர் 13ம் தேதி அன்று, வேம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”சில நாட்களிலேயே, சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்கும் எனது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகிறது நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியராய் இருப்பதில் இருக்கும் சிரமங்கள் புரிகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

களத்தில் நான் பார்த்தது என்னவென்றால் வறுமை தான். இங்கு வரும் குழந்தைகள் பசியில் இருந்தனர். நீங்கள் பசியில் இருக்கும் போது எப்படி படிப்பீர்கள்? அதனை சரி செய்ய வேண்டும். நான் மத்திய உணவு திட்டத்தை வரவேற்கின்றேன். ஆனால் அது போதாது. நாள் ஒன்றுக்கு 2 நேர உணவினை வழங்கும் அவரின் பள்ளி, மாலை 4:30 மணிக்கு, குழந்தைகள் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு, சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது – என்கிறார் வேம்பு

வேம்புவை பொறுத்தவரை , கொள்கைகள் எல்லாம் சென்னை அல்லது டெல்லியில் நல்ல நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால் கிராமங்களை நெருங்கும் போது அவை நீர்த்துப் போய்கிறது. களத்தில், இந்த திட்டங்களை நிறைவேற்ற போதுமான திறமையாளர்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.

சிலர் உண்மையாகவே படிக்க விரும்புகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு, 8 அல்லது 10 வகுப்பிற்கு பிறகு, பள்ளியில் இருந்து வெளியேறிவிட நினைக்கின்றனர். இடைநிற்றலை தடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. இந்த பகுதியில் மாணவர்களை அவர்களின் அறிவுத்திறன் பொறுத்து பிரிக்கப்படுகின்றனர். அவர்களின் வயதுகளை வைத்து அல்ல. அது மிகவும் உண்மையான சவாலாக இருக்கிறது.

மற்றொருமொரு சவால் என்னவென்றால், ஆசிரியர்கள் இந்த கிராமங்களிலேயே வாழ்வது இல்லை. 40 கி.மீ அப்பால் இருக்கும் நகர்ப்புறத்தில் இருந்து வருகிறார்கள் செல்கிறார்கள். தங்களால் முடியும் என்று யோசிக்கின்ற போது மக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கின்றனர். ஆனால் கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தங்களின் குழந்தைகளை கிராமப்புற பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளே அரசு பள்ளியில் படிக்கின்றனர். பெற்றோர்களின் வருமானம் குறைவாக இருக்கலாம். அவர்களுக்கு ஒரு சில நாட்களே வேலை இருக்கலாம். குடிப்பழக்கம் மற்றொரு பிரச்சனை. ஒரு அப்பா குடிகாரர் என்றால், அவர் தன்னுடைய வருமானத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. அவருடைய குழந்தை புறக்கணிப்படும். அவர்கள் பசியோடு இருப்பார்கள். நான் இதை இங்கே பார்த்தேன் என்று கூறினார் வேம்பு.

கல்வி முறைகளில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு வேராக இருப்பது மதிப்பெண்கள் தான். நல்ல திறமையான குழந்தைகளும் கூட மதிப்பெண்களில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் பெறும் அறிவை குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. நிறைய பேர் பாரம்பரிய முறையில் கல்லாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் எங்களின் குடும்பத்தில் அவர்களை நாங்கள் நன்கு அறிவோம். அவர்கள் அறிவாளியானவர்கள் ஆனால் அவர்களின் தேர்வு முடிகள் அதனை அறிவிப்பதில்லை. இந்த சிஸ்டம், பரிச்சையில் தோல்வியுற்ற ஆனால் சிறப்பான முறையில் செயல்படுகிற, பாரம்பரியமுறையில் கற்காதவர்களுக்கும் இந்த சிஸ்டம் இடம் அளிக்க வேண்டும்.

இந்த பள்ளிக்கு முன்பு, ரூ. 3,300 கோடி இயக்க வருமானத்தை 2018 – 2019 ஆண்டில் பெற்ற, 50 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஜோஹோ நிறுவனம் தமிழகம் முழுவதும் ஊரக அலுவலகங்களை திறந்து, மென்பொருள் பொறியாளர்களை அவர்களின் கிராமத்திற்கு அழைத்து வந்தது. என்னுடைய ஒரே கோரிக்கை கிராமப்புறங்களில் அலுவலகங்கள் திறப்பது தான். அவர்கள் அவர்களின் இடங்களை தேர்வு செய்து கொள்ளட்டும். மேலும் 10 அலுவலகங்களை இன்னும் 3 மாதங்களில் திறந்துவிடுவோம். கேரளா ஆந்திராவிலும் 100 நபர்கள் வேலை செய்யும் வகையில் அலுவலகங்கள் திறக்கப்படும் என்று கூறினார்.

மதலாம்பாறையில் நிறைய நண்பர்களை டீக்கடையில் இருந்தும், குழந்தைகளின் கிரிக்கெட் அணியில் இருந்தும் பெற்றிருப்பதாக கூறும் அவர், அவர்கள் மிகவும் இனிமையானவர்கள். அந்நியமானவராக இருப்பினும் கூட நட்போடு பழகுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Silicon valley star is now teacher in tamil nadu says busy with new start up

Next Story
Tamil News Highlights : கேரளாவில் இன்று 11,755 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com