/indian-express-tamil/media/media_files/2025/05/20/5omvbVPPWQqNbJBkGfGW.jpg)
போலி சிம்கார்டுகள் வாங்கி கிரிமினல்களுக்கு சப்ளை: 39 ஏஜெண்ட் மீது சி.பி.ஐ வழக்கு
ஆள்மாறாட்டம், போலி டிஜிட்டல் கைது மற்றும் முதலீடு மோசடிகள் போன்றவற்றின் மூலம் மக்களை ஆன்லைனில் ஏமாற்ற பயன்படுத்தப்படும் பதிவு செய்யப்படாத போலி சிம் கார்டுகளை வழங்கியதாகக் கூறப்படும் 39 விற்பனை (PoS) முகவர்கள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அடையாளம் காணப்பட்ட முகவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி ஏஜென்சிஸின் சதாசிவம் ஆவார்.மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் உ.பி., மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்று சி.பி.ஐ-ன் பொருளாதார குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முகவர்கள் சிம் வாங்குபவரின் பெயரில் 2 கார்டுகளைப் பதிவு செய்வார்கள் என்றும், ஆரம்ப முயற்சியிலேயே eKYC தோல்வியடைந்ததாக கூறி, பதிவு செய்வார்கள் என்றும் CBI கூறியது.முறையாக வாங்குபவருக்கு ஒரு சிம் கார்டு கிடைக்கும் அதே வேளையில், அவர்களின் பெயரில் உள்ள 2-வது மற்றும் பதிவு செய்யப்படாத போலி சிம் சைபர் குற்றவாளிகளுக்கு விற்கப்படும்.பின்னர் இந்த சட்டவிரோத எண்கள் மோசடியான வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், தெரியாத நபர்களை ஏமாற்றும் அழைப்புகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயன்பாட்டில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட இந்தியத் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களால் வழங்கப்பட்ட 64 ஆயிரத்து 223 சந்தேகத்திற்கிடமான சிம் கார்டுகளை அடையாளம் காட்டிய சிறப்பு அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு தொடங்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சிம் கார்டுகள் ஆயிரத்து 930 விற்பனை முனைய முகவர்களால் விற்கப்பட்டது தெரியவந்தது. தொலைத்தொடர்புத் துறையுடன் நடத்திய சரிபார்ப்புக்குப் பின், தேசிய குற்றப்பதிவு இணையதளத்தில் (என்.சி.ஆர்.பி) 84 விற்பனை முகவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இவர்களில் 39 பேர் தற்போது செயல்பட்டு வருகின்றனர். மேலும், சிலர் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதற்காகவோ அல்லது தொடர்புகளுக்காகவோ கைது செய்யப்பட்டுள்ளனர். "தேசிய குற்றப் பதிவு இணையதளத்தில் ஒரு தொலைபேசி எண் குறித்து புகாரளிக்கப்படும் போதெல்லாம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் பயனர்களை மீண்டும் இ-கேஒய்சி செய்ய கேட்க வேண்டும். இருப்பினும், தொலைத்தொடர்புத் துறையின் தரவுகள் பெரும்பாலான சிம் கார்டுகள் மறு சரிபார்ப்பில் தோல்வியடைந்தன என்பதைக் காட்டுகின்றன" என்று சி.பி.ஐ. அறிக்கை கூறியது.
இந்த சிம் கார்டுகளை அங்கீகரிப்பதில் தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளது.
நன்றி: timesofindia.indiatimes.com
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.