மாஸ் காட்டிய சிம்பு ரசிகர்கள்.. ஹவுஸ்ஃபுல்லான தியேட்டர்கள்: தெறிக்கும் மாநாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

வெங்கட் பிரபு ஏற்கெனவே கொடுத்த வெற்றிப் படங்கள், மாநாடு படத்தின் ப்ரோமோக்கள் என இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியது.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் வெளியான முதல்நாளே மாநாடு திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தனது முத்திரையை பதிவு செய்தது.

வெங்கட் பிரபு ஏற்கெனவே கொடுத்த வெற்றிப் படங்கள், மாநாடு படத்தின் ப்ரோமோக்கள் என இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியது.

சிலம்பரசன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் கடைசி நேரத்தில் குழப்பத்திற்கு பிறகு நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல தியேட்டர்களில் அதிகாலை மற்றும் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட பிறகும் ரசிகர்கள் உற்சாகத்துடன் திரையரங்குகளில் குவிந்தனர். இதனால், மாநாடு, மாநிலம் முழுவதும் நல்ல ஓபனிங் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி உள்ளது.

‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’, மற்றும் ‘கர்ணன்’ படங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டின் 4வது சிறந்த ஓப்பனிங் டே பாக்ஸ் ஆபிஸாக மாநாடு உள்ளது.

மாநாடு, தமிழகம் முழுவதும், 430க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சுமார் 500-600 திரைகளிலும் வெளியானது. தொடக்க நாளிலேயே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 25ஆம் தேதி, தமிழ்நாட்டில் மட்டும் ரூ 6.37 கோடியும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ 90 லட்சம் முதல் 1 கோடியும், வெளிநாட்டு சந்தையில் ரூ 1.2 கோடியும் வசூலித்தது. எனவே மாநாடு படம் தொடக்க நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ 8.40 கோடி வசூலித்துள்ளது.

மேலும் படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல தியேட்டர்கள் காட்சிகளை அதிகரித்துள்ளன. இதை வைத்து பார்க்கும்போது, மாநாடு 2-வது நாளில் (நவம்பர் 26), 8.5 முதல் 9 கோடி வரை வசூலித்திருக்கலாம். இதன்மூலம் மாநாடு இரண்டு நாள் மொத்த வசூல், உலகம் முழுவதும் ரூ 17 முதல் 17.5 கோடிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் , மாநாடு வெளியான முதல் நாளில் ரூ.88.65 லட்சத்தை வசூலித்ததாக கூறப்படுகிறது. சென்னையில், சிம்பு நடித்த படத்திற்கு இது மிகப்பெரிய ஓப்பனிங். ஆனால் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூலித்த விஜய்யின் மாஸ்டர் சாதனையை மாநாடு முறியடிக்க முடியவில்லை.

ரோகினி சில்வர் ஸ்க்ரீன்ஸின் மேலாளர் நிகிலேஷ் சூர்யா, மாநாடு வெற்றி பெற்றுள்ளது. ” இது 2200 அதிகாலை காட்சி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு என்று ட்வீட் செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மாநாடு திரைப்படம் அபார வெற்றி பெற்றுள்ளது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், இப்படம் வெகுஜன கூட்டத்தை திரையரங்குகளை நோக்கி இழுத்து வருகிறது. இதனால் அடுத்த சில நாட்களில் மாநாடு பாக்ஸ்-ஆபிஸ் வசூல் மேலும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Simbu maanadu movie box office collection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express