வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்கனவே மருந்தகத்தை நடத்தி வரும் சிம்ஸ் மருந்தகம், நகரில் மேலும் 9 மெட்ரோ ரயில் நிலையங்களில் மருந்தகங்களைத் திறந்துள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் 9 புதிய மருந்தகங்களை நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனர்.
ஆலந்தூர், எழும்பூர், சென்னை சென்ட்ரல், கோயம்பேடு, ஐகோர்ட், திருமங்கலம், அரசு எஸ்டேட், ஆயிரம் விளக்கு, சி.எம்.பி.டி மற்றும் வடபழனி ஆகிய மெட்ரோ நிலையங்களில் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
சிம்ஸ் பார்மசி மெட்ரோ நிலையங்களில் ஹலோ டாக்டர் வசதி மூலம் தொலைப்பேசி வாயிலாக மருத்துவ ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களிடம் நேரிலோ அல்லது தொலைப்பேசி வாயிலாகவோ ருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.
ஹலோ டாக்டர் சேவை மெட்ரோ பயணிகளுக்கு மட்டும் கிடைக்கும் மற்றும் 044-20012001 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“