/indian-express-tamil/media/media_files/tgMFQOLaQhDWp4UBcIpR.jpg)
கோவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் வாக்குகள் சேகரிப்பு.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore:கோவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், சிங்கை ராமச்சந்திரன் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் ஜி.பி சிக்னல், மற்றும் சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாகனப் பிரச்சாரம் மூலமாகவும், வீடு வீடாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாக்குகளை சேகரித்தார்.
#வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே#வெல்லட்டும்_இரட்டைஇலை#ParliamentaryElection2024#Coimbatore#AIADMKpic.twitter.com/cnZ1ccetLR
— Singai G Ramachandran - Say No to Drugs and DMK (@RamaAIADMK) April 1, 2024
கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் முன்னாள் அமைச்சர் செ ம. வேலுச்சாமி உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தனர்.
அதைத்தொடர்ந்து பேசிய வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், "அ.தி.மு.க எப்போதும் ஏழை - எளிய மக்களுக்கு அரணாக விளங்கக்கூடிய கட்சி. கொரோனா காலங்களில் எந்த வித சாதி மத பாகுபாடு இன்றி அனைவருக்கும் வீடு வீடாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் கொண்டு சேர்த்தோம். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு முழு மனித வளர்ச்சியை போன்று இருக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்காக என்றும் உறுதுணையாக இருப்போம்" என்று சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கோவை - கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி புதூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் மாண்புமிகு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் @PRGArunkumar அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பொதுமக்களைச் சந்தித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.… pic.twitter.com/C6kw2MV6bZ
— Singai G Ramachandran - Say No to Drugs and DMK (@RamaAIADMK) April 1, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.