கோவையைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி ஒருவர், தனது மகன் இறந்துவிட்ட நிலையில், அவரது கையில் இருந்த 15,000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் இருந்துள்ளார். இந்த 15,000 ரூபாயும் செல்லாத பழைய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளது.
பணத்தை மாற்றுவதற்காக மூதாட்டி அதிகாரிகளிடம் சென்றபோது, "அது செல்லாது, பழைய நோட்டுகளை மாற்ற முடியாது, கொண்டு போய்த் தீயை வைத்துவிடுங்கள்" என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். இதனால் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்தியின் படமுள்ள பணத்தையே தீயில் போடுவதா என்று மூதாட்டி மனம் உடைந்திருக்கிறார்.
இந்தத் தகவலை அறிந்த சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ திரு. ஜெயராமன், மூதாட்டியின் வேதனையைப் புரிந்துகொண்டு, அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய நோட்டுகளைத் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். மூதாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க வழங்கிய இந்த உதவி, பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.