சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, கோவில் குளங்களை புனரமைக்கவும், கூடுதல் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைக்கவும் குடிமை அமைப்பு முன்முயற்சியுடன் வந்துள்ளது.
சென்னையில் எட்டு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், ஒரு தண்ணீர் தொட்டி சீரமைப்பு, நொச்சிக்குப்பதில் மீன் மார்க்கெட் அமைத்தல், இறைச்சி கூடத்தை மேம்படுத்துதல், 3 பள்ளி கட்டடங்களை சீரமைத்தல் உள்ளிட்ட 14 திட்டங்களுக்கு ரூ.24.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோழிங்கநல்லூர் மற்றும் மணலியில் தலா மூன்று என்று, வளசரவாக்கத்தில் இரண்டு என பல்வேறு மண்டலங்களில் ரூ.4.28 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் மைதானங்கள் கட்டப்படும்.
ஓவியங்களால் அலங்கரிக்கப்படும் பூங்காக்களில் நடைபாதைகள், யோகாசனம் செய்யும் இடம், பெஞ்சுகள், ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். விளையாட்டு மைதானங்களில் கால்பந்து, பாட்மிண்டன், ஹேண்ட்பால் விளையாட்டுகளுக்கான வசதிகள் இருக்கும்.
இந்து சமய அறநிலையத் துறையின் (HR and CE) கீழ் வரும், வளசரவாக்கத்தில் உள்ள அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க சுமார் 2.99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராயபுரத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில், 2.69 கோடி ரூபாய் செலவில், 102 கடைகள் வைக்கக்கூடிய மீன் மார்க்கெட் அமைக்கப்படும். அதேபோல் சைதாப்பேட்டையில் 2008ல் கட்டப்பட்ட இறைச்சி கூடம் ரூ.1.43 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியானது டிரிப்ளிகேன் மற்றும் நியூ காமராஜர் நகரில் உள்ள இரண்டு நடுநிலைப் பள்ளிகளையும், பெரம்பூரில் உள்ள மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்மார்ட் போர்டுகள், நூலகங்கள், பசுமை வழிச்சாலைகள் மற்றும் ஓய்வறைகள் போன்றவற்றுடன் ரூ.12.95 கோடியில் புதுப்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil