Advertisment

சிங்கார சென்னை 2.0-ன் அடுத்த திட்டம்: 1000 மரக்கன்றுகளுடன் மின்ட்டில் புதிய பூங்கா

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலனுக்காகவும், சென்னையின் அழகை மேம்படுத்துவதற்காகவும் 786 பூங்காக்களை நிறுவியுள்ளது.

author-image
WebDesk
New Update
சிங்கார சென்னை 2.0-ன் அடுத்த திட்டம்: 1000 மரக்கன்றுகளுடன் மின்ட்டில் புதிய பூங்கா

சென்னை சென்ட்ரலுக்கு அருகே உள்ள மின்ட் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மின்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் பொழுதுபோக்கிற்கு வசதியாக ஒரு புதிய அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

publive-image

இப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த புதிய பூங்கா திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் வரும் இந்த திட்டம், மின்ட் மேம்பாலத்தின் கீழ், 5 கோடி ரூபாய் செலவில் பூங்கா கட்டப்படுகிறது.

இந்த பூங்காவில் வாக்கர்ஸ் பாதை, மூத்த குடிமக்களுக்கான தனிப்பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மற்றும் யோகா வசதிகள், சிற்பங்கள் மற்றும் கலை வேலைப்பாடுகள், கழிப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை இருக்கும்.

இந்த பூங்காவில் உள்ளூர்வாசிகள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக மொத்தம் 1,000 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இவற்றை பெரு சென்னை மாநகராட்சி பராமரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலனுக்காகவும், சென்னையின் அழகை மேம்படுத்துவதற்காகவும் 786 பூங்காக்களை நிறுவியுள்ளது. அவற்றில் 584 பூங்காக்கள் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment