scorecardresearch

முக்கியமான சாலைகள் சீரமைக்கப்படும்: சிங்கார சென்னை 2.0 அடுத்த திட்டம்

ஒரு மாதத்திற்குள், 365 சாலைகளை ரூபாய் 40 கோடி செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கியமான சாலைகள் சீரமைக்கப்படும்: சிங்கார சென்னை 2.0 அடுத்த திட்டம்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை முழுவதும் சாலைகளை சீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அடையாறில் சாஸ்திரி நகரின் பிரதான சாலை, தேனாம்பேட்டை மண்டலத்தில் ராமகிருஷ்ணா சாலை, தொண்டியார்பேட்டை இளைய தெரு மற்றும் அண்ணாநகர் முதல் தெரு ஆகிய சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கவிருக்கிறது.

ஒரு மாதத்திற்குள், 365 சாலைகளை ரூபாய் 40 கோடி செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது முடிந்ததும், சென்னை மாநகராட்சி 50 கோடி செலவில் சுமார் 500 உட்புறச் சாலைகளில் இந்த பணியை தொடர இருக்கின்றன.

அரசு உத்தரவின் மூலம் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தினால், தற்போது சீரமைக்கப்படும் சாலைகளில் வாகனம் ஓட்டும்போது சிரமம் ஏற்பட்டால் குடியிருப்பாளர்கள் பொறுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

சீரமைக்கப்படும் முக்கிய சாலைகள் மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகலாம். பெரும்பாலான பணிகள் இரவில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து, தற்போது சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட இரண்டாவது பிரதான சாலையான அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ அருகே உள்ள பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Singara chennai 2 project renovate main roads in the city

Best of Express