சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 50 பூங்காக்கள் மற்றும் 15 விளையாட்டு மைதானங்களை சேர்க்கும் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பூங்காக்கள் அனைத்தும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் பசுமையான இடம், இயற்கை தோட்டங்கள், மருத்துவ தாவரங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் பிற பூங்காக்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் தற்போது இதுபோல 786 பூங்காக்கள் உள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன, அது ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தவுடன், டெண்டர் விடப்படும்.
கடந்த ஆண்டு, மாநகராட்சி, 150 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணியை துவக்கி, 37ல் முடிக்கப்பட்டது. மீதமுள்ள பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன என்று தலைமைப் பொறியாளர் (பூங்காக்கள்) வி புவனேஷ்வரன் தெரிவித்தார். "இரண்டு மாதங்களில் அவை பயன்பாட்டுக்கு தயாராகிவிடும்" என்று அவர் கூறினார்.
புதிய பூங்காக்கள் அமைப்பது மட்டுமின்றி, விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், வசதிகள் குறைவாகவும் உள்ள பழைய பூங்காக்களை மாநகராட்சி சீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil