/tamil-ie/media/media_files/uploads/2023/04/Express-Image-2-4.jpg)
சென்னை மெட்ரோவின் மூலம், 'ஒன் சிட்டி ஒன் கார்டு' என்கிற டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வசதியை பேகிராப்ட் (paycraft) நிறுவனத்தின் மூலம் செயல்பட்டிற்கு கொண்டுவருகின்றனர்.
சென்னை மெட்ரோவிற்கான என்.சி.எம்.சி., கார்டு (National Common Mobility Card) டிக்கெட் முறையை paycraft நிர்வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Paycraft என்பது 2013 இல் நிறுவப்பட்ட ஒரு fintech செலுத்தும் நிறுவனமாகும், இது நகர்ப்புற இயக்கத்தை செயல்படுத்த மற்றும் எளிதாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
புனே மெட்ரோவில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம், வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், நாட்டில் இரண்டாவது முறையாக சென்னையில் இந்த டிக்கெட் வசதி அமல்படுத்தப்படுகிறது.
சிங்காரா சென்னை கார்டு எனப்படும் NCMC டிக்கெட் வசதியை ஒருவர் பெறுவதற்கு, paycraft தளத்தை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த இணையதளத்திற்கு சென்று பயணியின் தகவல்களையும் கட்டணத்தையும் செலுத்தி இந்த கார்டிற்கான பதிவை செய்துகொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து, இந்த கார்டு பயன்படுத்தும் பயணிகள், தடையற்ற பயணத்திற்கு சென்னை மெட்ரோவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பேகிராப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அம்பரீஷ் பரேக், தனது அறிக்கையில் கூறியதாவது:
"சென்னை குடிமக்களின் தினசரி தடையற்ற பயணத்தை எளிதாக்கும் வகையில், சென்னை மெட்ரோவின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். தற்போதுள்ள க்ளோஸ்டு லூப் தானியங்கி கட்டண வசூல் முறையை, ஓப்பன் லூப் சிஸ்டத்திற்கு மேம்படுத்துவதற்காக சென்னை மெட்ரோவுடன் இனைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்", என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us