Advertisment

ஜன.8 கோவையில் லைவ் கான்செர்ட்: பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் பேட்டி

நமது கலாச்சார மேடை நாடக பாடல் நிகழ்ச்சிகளின் பரிமாணமே - லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி எனவும் அதனை நாம் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் பேட்டியளித்தார்.

author-image
WebDesk
New Update
Singer Sakthi Sri Gopalans concert will be held in Coimbatore on 8th January

பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் நடத்தும் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி வரும் ஜூன் 8'ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் நடத்தும் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி  வரும் ஜூன் 8'ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. இது குறித்து  செய்தியாளர்களை சந்தித்த 

பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியில் பாடும் போது புதிய அனுபவத்தை கொடுக்கும் தன்னுடன் பணியாற்றும் சக பாடகர்கள்  இசைக்கலைஞர்கள் ஆகியோருடன் சந்திப்பு பல்வேறு பழைய நினைவுகளையும் உற்சாகத்தையும்  கொடுக்கும். 

Advertisment

கோவை அமைதியான நகரம் அதே நேரத்தில் இசை நிகழ்ச்சிகளுக்கு உற்சாகமாக மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தால்,  மக்கள் ஆதரவு அதிக உள்ள நகரங்களில் கோவையும் உள்ளது.

நானும் பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். இதில் முதல் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைக்க நினைத்தபோது முதலில் தோன்றியது கோவை தான். லைவ் கான்செர்ட் என்பது நமது கலாச்சாரத்தின் பரிணாமம் மட்டுமே அந்த காலத்தில் மேடைகளில் நேரடியாக மக்களை சந்தித்து பாடல்கள் மூலம் நாடகம் நடத்தினார்கள். 

இசை கலைஞர்கள் நேரடியாக கருவிகளை வாசித்தனர்,  காலத்திற்கு ஏற்ற பரிமானமே லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி இதனை நாம் வேறுபடுத்தி பார்க்க தேவையில்லை.  தற்போது திறமையுள்ள பாடகர்களுக்கு பல்வேறு ஊடகங்கள் உள்ளது. அவர்களுக்கு தேவையான ஊடகத்தை தேர்ந்தெடுத்து திறமைகளை காட்டி வருகின்றனர். 

மேலும் அவர்களுக்கு என்று தனியான பாலோவர்ஸ் உள்ளார்கள். சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதா..?  என்ற கேள்விக்கு பதில் அளித்த சக்தி ஸ்ரீ அதற்கு முதலில் நடிக்க தெரிய வேண்டும்.  

தற்போது இசையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன்.  "தங்களிடம் சூப்பர் ஹீரோ கதை இருந்தால் கொடுங்கள் நடிக்கிறேன்" என காமெடியாக பேசிய அவர் பாடல்களின் மேக்கிங் வீடியோக்களில் நடிக்கிறோம் அதுவும் நல்ல அனுபவமாக உள்ளது என கூறினார்,.

செய்தியாளர் சந்திப்பிக்கிடையே "நெஞ்சுக்குள்ள என் முடிஞ்சு வச்ச"   " வாயா என் வீரா கன்ன குழியே குழியே" ஆகிய பாடல்களை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment