திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன். சென்னை அடையாறில் வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் மரணமடைந்தார்.
1980ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ’பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தொடு, திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் பின்னணி பாடி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“