/indian-express-tamil/media/media_files/2025/08/23/sivaganga-admk-cadre-poster-thanking-bjp-leader-annamalai-tamil-news-2025-08-23-16-18-02.jpg)
சிவகங்கை மாவட்டம், திருப்புவணத்தில் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு கோடான கோடி எனக் குறிப்பிட்டு அ.தி.மு.க தொண்டர்கள் போஸ்டர் ஓட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவணத்தில் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு கோடான கோடி எனக் குறிப்பிட்டு அ.தி.மு.க தொண்டர்கள் போஸ்டர் ஓட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க தலைவர்களை விமர்சித்ததாக கூறி பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை அ.தி.மு.க தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொருப்பேற்ற பிறகு அ.தி.மு.க, பா.ஜ.கவிடையே இணக்கமான சூழல் ஏற்பட்டு மீண்டும் கூட்டணி அமைக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில், அன்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க அனைவரும் பாடுபடவேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்து அ.தி.மு.க-வை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துனைச்செயலாளர் மணிமாறன் என்பவர் திருப்புவனம் நகர் முழுவதிலும் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்.
அதில், 'எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என தெரிவித்த பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு கோடான கோடி நன்றி' என வாசகங்கள் அடங்கியுள்ளது. இந்தப் போஸ்டரை அவர் நகர் முழுவதும் ஒட்டியுள்ளார். மேலும் இந்த போஸ்டரை பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இருப்பினும், அ.தி.மு.க தொண்டர்கள் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.