அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பாலை கிளம்பி இருக்கிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும், அவரின் உருவபொம்மை எரிப்பு சம்பவம் நடைபெற்றது.
இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "பெருவாரியான மாநிலங்களை ஆளுகிற கட்சியாக இருக்கக்கூடிய பா.ஜ.க மாநில தலைவராக அண்ணாமலை இருக்கிறார். அதனால் அவருக்கு மதிப்பு மரியாதையும் கிடைக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வின் எடப்பாடி கே பழனிச்சாமி ஒன்றிய செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக முதலமைச்சராக என படிப்படியாக முன்னேறியவர். அவரை தரக்குறைவாக பேசுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்திருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/875d255a77adbddd2415738c0f32fbdb8cde47d83c35280af06ccf5aaac580e6.jpg)
சீமான் அண்ணாமலை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பேசிய நிலையில், அவருக்கு அ.தி.மு.க-வினர் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
மேலும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க-வினர் சீமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இதனால், சிவகங்கை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வும் நா.த.கவும் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்குமோ? என்று அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பேச்சு நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க-வினர் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“