Advertisment

அக்.31 வரை சிவகங்கையில் 144 தடை: கலெக்டர் உத்தரவு

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 223-வது குருபூஜை, தேவர் ஜெயந்தி ஆகிய தினங்களை ஒட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும்163 (144) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் ஆட்சியர் ஆஷா அஜித்.

author-image
WebDesk
New Update
Sivaganga district collector Asha Ajith imposed Section 144  till Oct 31 2024 Tamil News

சிவகங்கை மாவட்டம், முழுவதும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் 163(144) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதார்கள் மணிமண்டபத்தில் நாளை வியாழக்கிழமை (அக்.24) விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப் படுகிறது. மேலும், சமுதாய அமைப்பு சார்பில் அக்.27-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள்,சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்த வரவுள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஸ் பரிந்துரையில் அக்.23-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் பி.என்.எஸ் 163 தடை (144 தடை உத்தரவு) உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பிறப்பித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Sivagangai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment