சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர் தூக்கிட்டுத் தற்கொலை: பெரும் அதிர்ச்சி

இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராணுவப் பணியைத் தொடர்ந்து, சிவகங்கை அருங்காட்சியகத்தில் பணியாற்றி அங்கிருந்தும் ஓய்வு பெற்றவர் எனக் கூறப்படுகிறது.

இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராணுவப் பணியைத் தொடர்ந்து, சிவகங்கை அருங்காட்சியகத்தில் பணியாற்றி அங்கிருந்தும் ஓய்வு பெற்றவர் எனக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-10-30 at 3.58.11 PM

Sivaganga Ex serviceman suicide

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிவகங்கை மஸ்ஜித் ரோட்டைச் சேர்ந்தவர் முத்து முனியாண்டி (வயது 65). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராணுவப் பணியைத் தொடர்ந்து, சிவகங்கை அருங்காட்சியகத்தில் பணியாற்றி அங்கிருந்தும் ஓய்வு பெற்றவர் எனக் கூறப்படுகிறது.

WhatsApp Image 2025-10-30 at 3.58.00 PM

முத்து முனியாண்டிக்குச் சில மாதங்களுக்கு முன்பு இதய நோய்க்காக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு முத்து முனியாண்டி வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர்.

Advertisment
Advertisements

இன்று (வியாழக்கிழமை) காலை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் முத்து முனியாண்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார்.

WhatsApp Image 2025-10-30 at 3.58.05 PM

போலீஸ் விசாரணை

இது குறித்துத் தகவல் கிடைத்தவுடன், சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துச் சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(மன உளைச்சலில் இருப்பவர்கள் அல்லது தற்கொலை எண்ணம் கொண்டவர்கள், தமிழக அரசின் உதவி எண் 104 அல்லது ஸ்னேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.)

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: