ஒரிஜினல் நகைக்குப் பதில் கவரிங்... ரூ.2 கோடி மோசடி; வசமாக சிக்கிய பிரபல தனியார் வங்கி மேலாளர் உட்பட 4 பேர்

மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கியிலான அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த போது அதில் சந்தேகம் எழுந்தது.

மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கியிலான அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த போது அதில் சந்தேகம் எழுந்தது.

author-image
WebDesk
New Update
Sivaganga Kallal ICICI Bank manager and 3 others arrested for fake jewell scam Tamil News

சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் (ICICI) வங்கியில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை மோசடி வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலில் ஐ.சி.ஐ.சி.ஐ என்கிற பிரபல தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, வருடாந்திர ஆய்வு நடைபெற்றதுள்ளது. மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை  வங்கியிலான அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த போது அதில் சந்தேகம் எழுந்தது. 

Advertisment

இதையடுத்து, அந்த நகைகளை முழுமையாக பரிசோதணை செய்யதனர். இதில் வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைக்கு பதில் அந்த நகை போலவே உள்ள கவரிங் நகைகள் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடைபெற்ற விசாரணையில் வங்கி மேலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த மேசாடியில் ஈடுபட்டது தெரியவந்தது.  மொத்தம் 533 பவுன் நகைகள் மோசடி செய்யப்பட்டிருப்பதும், இதன் மதிப்பு ரூ.2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மண்டல மேலாளர் கிருஷ்ணக்குமார் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர்  மணிவண்ணன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி கல்லல் பகுதியில் உள்ள பிரபல வங்கி மேலாளரான பட்டுக்கோட்டையை அருகே கோட்டைக்குளம் மேலமேட்டை சேர்ந்த விக்னேஷ் (34) என்பவரையும், உதவி மேலாளராக பணிபுரியும் காளையார்கோவில் அருகே புலிக்கண்மாயை சேர்ந்த ராஜாத்தி (39) என்பவரையும், மோசடிக்கு உதவி செய்த கல்லலை சேர்ந்த ரமேஷ் (38), சதீஷ்(21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தேசிய வங்கியில் இதே போன்று அடமான நகை மோசடி நடைபெற்ற நிலையில், தற்போது கல்லலிலும் அதுபோன்று மோசடி நடைபெற்றது வங்கி வாடிக்கையாளர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: சக்தி சரவணன் - சிவகங்கை.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Icici Bank Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: