சிவகங்கை தொகுதியில் 205664 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார் .
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் சிவகங்கை 31 ஆவது தொகுதியாகும். 1967 முதல் மக்களவை தொகுதியாக இருந்து வரும் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சிவகங்கை தொகுதியில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவை காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, ஆலங்குடி மற்றும் திருமயம். முதல் 4 தொகுதிகளும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவை. ஆலங்குடி மற்றும் திருமயம் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை.
2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), சேவியர் தாஸ் (அ.தி.மு.க), தேவநாதன் யாதவ் (பா.ஜ.க), எழிலரசி (நாம் தமிழர் கட்சி)
ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 64.26% வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இங்கு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வெளியாகின.
சிவகங்கை தொகுதி இறுதி நிலவரம்
சிவகங்கை தொகுதியில் 205664 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார்
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் – 427677 வாக்குகள்
அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ் – 222013 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் – 195788 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி எழிலரசி – 163412 வாக்குகள்
6 மணி நிலவரப்படி, சிவகங்கை தொகுதியில் 159371 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் – 335588 வாக்குகள்
அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ் – 176217 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் – 145571 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி எழிலரசி – 126311 வாக்குகள்
3 மணி நிலவரப்படி, சிவகங்கை தொகுதியில் 113930 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் – 245552 வாக்குகள்
அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ் – 131622 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் – 101174 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி எழிலரசி – 90626 வாக்குகள்
1 மணி நிலவரப்படி, சிவகங்கை தொகுதியில் 80629 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் – 174787 வாக்குகள்
அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ் – 94158 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் – 73613 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி எழிலரசி – 63470 வாக்குகள்
12 மணி நிலவரப்படி, சிவகங்கை தொகுதியில் 31559 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் – 65989 வாக்குகள்
அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ் – 34330 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் – 25184 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி எழிலரசி – 22059 வாக்குகள்
9 மணி நிலவரப்படி, சிவகங்கை தொகுதியில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் – 39398 வாக்குகள்
அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ் – 23035 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் – 15250 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி எழிலரசி – 14609 வாக்குகள்
2019 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) 5,66,104 வாக்குகள், ஹெச்.ராஜா (பா.ஜ.க) 2,33,860 வாக்குகள், தேர்போகி பாண்டி (அ.ம.மு.க) 1,22,534 வாக்குகள், சக்திப்ரியா (நாம் தமிழர் கட்சி) 72,240 வாக்குகள், கவிஞர் சினேகன் (மக்கள் நீதி மய்யம்) 22,931 வாக்குகள்.
2014 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: செந்தில்நாதன் (அ.தி.மு.க) 4,75,993 வாக்குகள், துரைராஜ் (தி.மு.க) 2,46,608 வாக்குகள், ஹெச்.ராஜா (பா.ஜ.க) 1,33,763 வாக்குகள், கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) 1,04,678 வாக்குகள்.
2009 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் (காங்கிரஸ்) 3,34,348 வாக்குகள், ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க) 3,30,994 வாக்குகள், ரெஜினா பாப்பா (தே.மு.தி.க) 60,054 வாக்குகள்.
2004 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் (காங்கிரஸ்) 4,00,393 வாக்குகள், கருப்பையா (அ.தி.மு.க) 2,37,668 வாக்குகள்,
1999 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) 2,46,078 வாக்குகள், ஹெச்.ராஜா (பா.ஜ.க) 2,22,267 வாக்குகள், சிதம்பரம் (தமிழ் மாநில காங்கிரஸ்) 1,27,528 வாக்குகள்.
1998 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் (தமிழ் மாநில காங்கிரஸ்) 3,03,854 வாக்குகள், காளிமுத்து (அ.தி.மு.க) 2,44,713 வாக்குகள், கௌரிசங்கரன் (காங்கிரஸ்) 34,114 வாக்குகள்.
1996 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் (தமிழ் மாநில காங்கிரஸ்) 4,18,774 வாக்குகள், கௌரிசங்கரன் (காங்கிரஸ்) 1,71,472 வாக்குகள், கணேசன் (ம.தி.மு.க) 41,164 வாக்குகள், பட்டாபி ராமசாமி (பா.ஜ.க) 6,739 வாக்குகள்.
1991 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் (காங்கிரஸ்) 4,02,029 வாக்குகள், காசிநாதன் (தி.மு.க) 1,73,432 வாக்குகள்.
1989 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் (காங்கிரஸ்) 4,30,290 வாக்குகள், கணேசன் (தி.மு.க) 2,10,738 வாக்குகள்.
1984 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிதம்பரம் (காங்கிரஸ்) 3,77,160 வாக்குகள், தா.கிருட்டிணன் (தி.மு.க) 1,64,627 வாக்குகள்.
1980 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சுவாமிநாதன் (இந்திரா காங்கிரஸ்) 3,06,748 வாக்குகள், தா.பாண்டியன் (சி.பி.ஐ) 1,72,187 வாக்குகள்.
1977 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: தியாகராஜன் (அ.தி.மு.க) 3,38,999 வாக்குகள், ராமநாதன் செட்டியார் (நிறுவன காங்கிரஸ்) 1,27,466 வாக்குகள்.
1971 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: தா.கிருட்டிணன் (தி.மு.க) 2,73,194 வாக்குகள், கண்ணப்பா வள்ளியப்பன் (நிறுவன காங்கிரஸ்) 1,73,106 வாக்குகள்.
1967 சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: தா.கிருட்டிணன் (தி.மு.க) 2,25,106 வாக்குகள், சுப்பிரமணியன் (காங்கிரஸ்) 1,66,889 வாக்குகள், நாராயணன் (சி.பி.ஐ) 26,588 வாக்குகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.