/indian-express-tamil/media/media_files/F5DI1KHSU4mIp9Ngns2z.jpg)
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள உதயாச்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (29). ஏ.சி மெக்கானிக்கான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை அனைத்து மகளீர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த வழக்கின் இன்று தீர்ப்பை நீதிபதி கோகுல் முருகன் வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கியும் மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.