சிவகங்கையில் அனுமதியின்றி மாட்டுவண்டிப் பந்தயம்: சாலையில் சென்ற பெண் மீது மாடு முட்டியதால் அதிர்ச்சி

சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தின் போது சாலையில் சென்ற பெண் மீது மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தின் போது சாலையில் சென்ற பெண் மீது மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Sivaganga Unauthorized bullock cart race Shock as cow hits woman on road Tamil News

சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தின் போது சாலையில் சென்ற பெண் மீது மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தின் போது சாலையில் சென்ற பெண் மீது மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கொல்லங்குடியில் நேற்று முன்தினம் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. காவல் துறையினரின் அனுமதியின்றி நடைபெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 44 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 

பெரிய மாட்டு பிரிவில் 17 ஜோடிகளும் இரு சுற்றுலா நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் 27 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. இப்போட்டியின் போது போட்டி போட்டு முன்னேறி சென்று கொண்டிருந்த இரு வண்டிகள் சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியின் மீது மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பிய மூதாட்டி பின்னர் எழுந்து நடந்து சென்றார். 

Advertisment
Advertisements

இதேபோல், இந்த மாட்டு வண்டி பந்தயத்தின் போது ஒரு மாடு கால் இடறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றதால் போட்டியிலிருந்து அந்த மாட்டு வண்டி விலகியது. இந்த இரு பதபதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: