/indian-express-tamil/media/media_files/2025/07/03/nikitha-ajithkumar-2025-07-03-18-33-09.jpg)
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புகார் அளித்த நிகிதா மாற்றி மாற்றி இருவேறு தகவல்களை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மடப்புரம் காளியம்மன் கோவிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் நகை திருட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து அஜித்குமார் என்ற தற்காலிக ஊழியரின் மர்ம மரணம் குறித்த தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது நிகிதா பேசியிருக்கும் வீடியோவில் மாற்றி மாற்றி அவர் பேசியிருப்பது பல சந்தேகங்களையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அஜீத்குமார் மரணத்திற்கு முன்பாக அதாவது ஜூன் 27 ஆம் தேதி நிகிதா பேசியதும் அஜீத்குமார் இறப்பிற்கு பிறகு ஜூலை 2 ஆம் தேதி பேசியிருப்பது மாறி மாறி உள்ளது.
அதாவது இரண்டு வீடியோவிலும் நிகிதா கூறியிருக்கும் தகவல்கள் மாறி ம் வெளியான வீடியோவில் இடம்பெற்றிருக்கும் தகவல்களும் மாறி மாறி இருக்கின்றனர். இந்த வீடியோ திருட்டு சம்பவம் மற்றும் அஜீத்குமார் மரண வழக்கிலும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.
அஜீத்குமார் மரணத்திற்கு முன்பு ஜூன் 27 ஆம் தேதி நிகிதா கூறியிருக்கும் தகவல்கள்:
"மதுரை மாவட்டம் திருமங்கலத்தில இருந்து மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு
அம்பாள் தரிசனம் பண்றதுக்காக வந்தோம். இங்க வந்து எங்க அம்மாக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல உடல்நிலை சரியில்ல அவங்கள ஸ்கேன் எடுக்க சொல்லி இருந்தாங்க டாக்டர், அவங்களால சரியா பேச முடியல ஸ்கல் ஸ்கேன் எடுக்க சொல்லி இருந்தாங்க சோ ஸ்கேனுக்காக நாங்க போனப்போ நகை எல்லாம் கழட்டி எங்க பேக்ல வச்சிருந்தோம் காரோட பின்னு இருக்கையில வச்சிருந்தோம்.
அவங்க திடீர்னு மடப்புறம் காளியம்மனை நான் பார்த்த அப்புறம்தான் ஸ்கேன் எடுக்க ஒத்துக்குவேன்னு சொல்லிட்டாங்க அதனால ஸ்கேன் எடுக்காம நான் வச்ச நகையோட அப்படியே காளியம்மன் கோவிலுக்கு வந்தோம் வந்தா இங்க டெம்பிள் ஸ்டாப் ஒருத்தர் யூனிஃபார்ம் போட்டவர் நின்னுட்டு இருந்தாரு இவங்களுக்காக வீல் சேர் கேட்டேன் நானு
அவர் வந்து வீல் சார் கொண்டு வந்து கொடுத்துட்டு காரை நானே கொண்டு போய் நிப்பாட்டிட்டு வரேன்னு எங்ககிட்ட கார் சாவி வாங்கிக்கிட்டாரு உள்ள நான் வீல்சாரோட அம்மாவோட கோவிலுக்கு கோயிலுக்குள்ள சாமி தரிசனம் பண்ண போயிட்டேன்.
ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்து சாவி எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தாரு திரும்ப ரிட்டர்ன் வந்து நாங்க
வண்டிய அவர எடுத்துட்டு வந்து தர சொன்னோம். இப்ப வண்டி எடுத்துட்டு வந்து தந்தாரு அப்படியே நாங்க கிளம்பிட்டோம் கொஞ்ச தூரம் போன உடனே இவங்க சாப்பிடலையேன்னு சொல்லிட்டு நான் இவங்கள சாப்பிடுறீங்களாமான்னு கேட்டேன்.
அப்பறம் நகை எல்லாம் போட்டுக்கோங்க ரொம்ப மொட்டையா இருக்குன்னு சொல்லிட்டு பின்னாடி திரும்பி பேக்ல பார்க்கும்போது பேக் வெளிய கிடந்தது அதுல பார்த்தா நகை எல்லாம் இல்ல திரும்ப அப்படியே யூடர்ன் எடுத்து டெம்பிள்ல வந்து நாங்க ஹச்ஆர்எம்சி ஆபீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணோம் அவங்க சொன்னாங்க அவங்க நல்லா,
அப்புறம் அங்க இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்காக நாங்க வந்து கிட்டத்தட்ட மதியானம் 2 மணிக்கு வந்து இப்ப வரைக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கோம். எங்களை கூப்பிட்டு வந்து என்ன நடந்ததுன்னு கேட்கல இன்ஸ்பெக்டர் வருவாரு வெயிட் பண்ணுங்கன்னு சொல்லி இருக்காங்க.
அந்த பையன் அந்த அஜித்ங்கிற பையனை அவர் டெம்பரரி ஸ்டாப்ன்னு சொல்லி சொன்னாங்க. கூட்டிட்டு வந்து நாங்களே இங்க ஒப்படைச்சிருக்கோம். எச்ஆர்எசி சார்பாவும் எனக்கு ஒரு ஸ்டாப் கூட வந்துருக்காங்க இவங்க. அந்த நகையை எப்படியாவது காவல் துறை எங்களுக்கு வந்து மீட்டு கொடுக்கணும்னு கேட்டுக்கறோம் நாங்க திரும்ப ரொம்ப தூரம் போக வேண்டிய இருக்கு இவங்களோட உடல் நிலையும் மோசமாயிட்டே இருக்கறதுனால.
இது சம்பந்தமா என்ன நடவடிக்கை எடுத்துருக்காங்கன்னு தெரியல நான் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கேன் ஆனா அதுக்குரிய சிஎஸ்ஆர் எங்களுக்கு இன்னும் தரல எஃப்.ஐ.ஆர் போட்டுருக்காங்களான்ற தகவலும் தெரியல. சோ கம்ப்ளைன்ட் மட்டும் நாங்க எழுதி கொடுத்திருக்கோம் அதுக்குரிய மேல் நடவடிக்கை என்னன்றது தெரியாம நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.
நகை வந்து 10 பவுன் இருக்கும். செயின், வலையல், மோதிரம் எல்லாம் சேர்ந்து 10 பவுன் இருக்கும். அந்த
கோயில் ஸ்டாப் மேல உங்களுக்கு சந்தேகமா இருக்கு. கார் அவர்தான் எடுத்துட்டு போனாரு, எச்ஆர்எம்சில இருக்கறவங்க எல்லாம் கூப்பிட்டு விசாரிச்சப்போ அவரு நிறைய முன்னுக்கு பின் முரணா பதில் சொன்னாரு, என்கிட்ட 500 கேட்டு அவர் கொஞ்சம் தகராரும் பண்ணாரு; வீல் சேர் கொண்டு வந்தலாம் 500 குடுங்க நாங்க அஞ்சு ஸ்டாப் இருக்கோம் அப்படின்ற மாதிரி சொன்னாரு நான் 100 ரூபா தான் கொடுத்தேன் இம்மீடியட்டா ஒரு பிரண்ட் ஒருத்தருக்கு போன் மூலியமா எனக்கு அந்த மேடம் 500 கொடுத்தாங்க உனக்கு ஜிபேல நான் அனுப்பிடுவேன் அப்படின்ற தகவலும் சொல்லி இருக்காரு அந்த பிரண்டும் வந்து ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் வந்து கொடுத்தாரு,," என்று அவர் பேசியிருந்தார்.
அஜீத்குமார் மரணத்திற்கு பிறகு ஜூலை 2 ஆம் தேதி நிகிதா கூறியிருக்கும் தகவல்கள்:
"எனக்கு வண்டியில என்ன இருந்தது அப்படின்றது முழுசா தெரியவில்லை, தேங்காய் பழம் வாங்குவதற்கு மற்றும் தட்டில் காசு போடுவதற்கு பணம் வேண்டும் என்பதால் என்னுடைய ஹேண்ட் பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு அம்மாவுடைய நகை பையை காரில் பின்புற சீட்டில் வைத்துவிட்டு அதற்கு மேல் துணியை வைத்து விட்டு கோயிலுக்கு சென்று விட்டோம்.
அம்மாவிற்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றாலே பயம். அதனால் காரை ஸ்கேன் சென்டருக்கு எடுத்துக் கொண்டு செல்லும்போது சரியாக திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மாளை தரிசனம் செய்துவிட்டு தான் நான் ஸ்கேன் எடுக்க வருவேன் என்று எனது தாய் கூறிவிட்டார். அதனால் அவருடைய போக்கிலேயே சென்றுவிடலாம் என்று தான் கோயிலுக்கு சென்றோம்.
செல்லும் வழியில் நான் காரை ஓட்டிக் கொண்டு இருக்கும்போது அம்மா நகைகள் அனைத்தையும் நீங்கள் ஸ்கேன் சென்டரில் கழட்ட வேண்டாம். நகையை பாதுகாப்பாக காரிலேயே கழற்றி வைத்து விடுங்கள் என்று சொன்னேன். ஒரு செயின் இரண்டு மோதிரம் இரண்டு வளையல்கள் என மொத்தம் பத்து பவுன் நகை ஒரு பேக்கில் வைத்து அதற்கு மேல் துணிகளை போட்டுவிட்டு கோயிலுக்கு சென்றோம்.
கோயிலுக்குள் நுழைந்தவுடன் காவலாளி (அஜித்குமார்) சாவியை கொடுத்துவிட்டு நாங்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய சென்று விட்டோம். அதன் பிறகு காரை எடுத்துக்கொண்டு சென்ற அஜித் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அப்போது அம்மாவிற்கு கோயில் வளாகத்திலேயே புளியோதரை உணவு வாங்கி கொடுத்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மேலும் கோயில் உதவியாளரிடம் அஜித் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை எனக் கூறியவுடன் அவர் இரண்டு முறை அவருக்கு போனில்அழைத்தார்.
கோவில் உதவியாளர் ஒருவர் தான் வீழ்சேரை தள்ளுவதற்கு வந்தார். கோயில் உள்ளே சென்றதும் பூஜை பொருட்களுடன் சாவியை வைத்து பூஜை செய்ய கொடுத்தேன். ஆனால் பூஜை செய்யும்போது சாவியை எடுத்து விடுவார்கள் என்பது எனக்கு தெரியாது. அதன் பிறகு வெளியே வந்து பார்த்தபோது சாவியை காணவில்லை என கோவில் உதவியாளிடம் கேட்டபோது, அவர் இங்கேதான் உள்ளது என எடுத்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன ஆகுதுன்னா யூனிபார்ம் போட்ட ஒரு பையன் கிட்ட, கருப்பா கொஞ்சம் ஒல்லியா இருப்பான் அவன் கிட்ட தான் கார் சாவியை கொடுத்தோம். அப்படின்னு சொன்னதும் அந்த உதவியாளர் அவருக்கு போன் செய்தார்.
இவர் சொன்ன பிறகு அந்தப் பையன் ஒரு தம்பி கிட்ட, அறநிலையத்துறை ஆபீஸ் பக்கத்துல எங்களை விட்டுட்டு சாவியை வாங்கிட்டு போனான். நான் கொஞ்சம் சீக்கிரம் வாப்பா அம்மாவோட ரொம்ப நேரம் நிக்க முடியாது அப்படின்னு சொன்னேன்" என்று பேசி இருந்தார்.
முதல் வீடியோவில் சிறிது தூரம் சென்று உணவு சாப்பிடலாம் என்றபோது நகை இல்லாததை கவனித்ததாகவும் இரண்டாவது வீடியோவில் கோவிலிலேயே உணவு சாப்பிட்டதாக கூறியுள்ளார். 500 ரூபாய் கேட்டது, கார் சாவி கைமாறியது என்றெல்லாம் இரண்டு வீடியோவிலும் அவர் மாற்றி மாற்றி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வீடியோக்களிலும் மாற்றி மாற்றி பேசி இருப்பது இந்த சம்பவத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வெளியான 2 வீடியோக்களை வைத்து பார்க்கும்போது நிகிதாவிற்கு அஜீத்குமார் மீது அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை, மாற்றி மாற்றி பேசியதில் ஒரு உயிர் பரிதாபமாக போய் விட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.