/indian-express-tamil/media/media_files/2025/09/17/porkodi-sivagangai-collector-2025-09-17-20-57-11.jpg)
சிவகங்கையில் தாட்கோ வாழ்வாதாரத் திட்டங்களுக்கு இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்களின் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களில் எளிய முறையில் பயன்பெறுவதற்காக, இப்போது தமிழக அரசு இ-சேவை மையம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா. பொற்கொடி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் மற்றும் மத்திய அரசின் PM-AJAY உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ் பலர் இணையதளம் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் வழியாக விண்ணப்பித்து வருகிறார்கள்.
விண்ணப்பிக்கும் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், தாட்கோ சார்பாக தற்போது CM-ARISE, PM-AJAY, நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையம் வழியாகவும் மக்கள் விண்ணப்பிக்க முடியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கான நலத்திட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள, அருகிலுள்ள அரசு இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.