/indian-express-tamil/media/media_files/2025/05/31/5VCoBa2BHVMK1HOwT0u1.jpg)
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், சின்ன உஞ்சனை கிராமத்தில், கடந்த 28.06.1979 அன்று புரவி எடுப்பு விழாவில் உயிரிழந்த ஐந்து நபர்களின் நினைவாக, தேவேந்திர குல வேளாளர் அமைப்புகள் மற்றும் பிற தலித் அமைப்புகள் இணைந்து, 46வது "ஐவர் தினம்" நிகழ்ச்சியை இவ்வாண்டு ஜூன் 28, 2025 அன்று அனுசரிக்கின்றன.
இந்த நிகழ்வின் போது, சின்ன உஞ்சனை கிராமத்தில் பால்குடம் மற்றும் பூத்தட்டு ஒப்பனைகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிகளை முன்னிட்டு, தேவகோட்டை வட்டம், ஆராவயல் காவல் சரகத்தின் கீழ் செயல்படும் கீழ்க்கண்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒருநாள் முழுவதும் மூடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது:
1. மேலசெம்பொன்மாரி (பீடர் எண்: 7501)
2. முள்ளிக்குண்டு (பீடர் எண்: 7580)
3. உஞ்சனை ரோடு - நரசிம்மபுரம் (பீடர் எண்: 7603)
4. உஞ்சனை (பீடர் எண்: 7521)
மேற்கண்ட அனைத்து கடைகளும் 28.06.2025 அன்று மட்டும் முழுவதுமாக செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.