/indian-express-tamil/media/media_files/2025/05/28/hB7MB35BF5j0WHRKpP9J.jpeg)
சிவகங்கை மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கருவூல அதிகாரியாக பணியாற்றி வந்தார். தாய் தந்தையை இழந்த 13 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில், ராஜ்குமார் சிறுமிக்கு உதவி செய்வது போல் தனது வீட்டிற்கு வரவழைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லவே பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது.
இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் 2018 ஆம் ஆண்டு புகார் அளித்ததின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் குற்றவாளி ராஜ்குமாருக்கு 10 வருட சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.