சிவகங்கை அருகே உள்ள சாமியார் பட்டி பகுதியைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக இருந்த பிரவீன் குமார் தனது சொந்த ஊரான சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது, அடையாளம் தெரியாத ஐந்து பேருக்கும் மேற்பட்ட மர்ம கும்பல் மீது வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது, மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/45f376a4-1aa.jpg)
இந்தக் கொலையை கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், பிரவீன் குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மானாமதுரை - சிவகங்கை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.