சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்தும், பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 24 மணிநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/7e3efbf7-472.jpg)
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/cf3e7022-7d7.jpg)
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும், அலுவலகப் பணிமுடிந்த பிறகும் விடுமுறை நாட்களில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், மருத்துவம், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட துறைகளில் தனியார் ஏஜென்சி மூலம் பணி நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் 24 மணிநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.