/indian-express-tamil/media/media_files/2025/06/30/lock-up-death-2025-06-30-16-49-30.jpg)
பிரேதப் பரிசோதனை முடிவுகள் முதற்கட்ட தகவலில் குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காயங்கள் மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் பரவியுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான கோயில் காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், தற்போது அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் முதற்கட்ட தகவலில் குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காயங்கள் மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் பரவியுள்ளன.
உட்புற உறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசியல் போன்ற மரணத்துக்கே காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. சங்குப்பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் சொல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசியல் போன்றவை கூட மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித் குமார் மீது நடந்த பிரேத பரிசோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது. இது அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்கிறது.
இந்த வகையான வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள், அஜித் குமார் விசாரணையின் போது போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்ற புகாருக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.