/indian-express-tamil/media/media_files/2025/09/16/sivagangai-manamadurai-medical-waste-treatment-plant-protest-heats-up-tamil-news-2025-09-16-14-24-19.jpg)
மருந்தகம், பால் கடைகள் தவிர்த்து 95 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை அனுமதி ரத்து செய்யக் கோரி, இன்று காலை முதல் கடையடைப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/a509c3f3-a75.jpg)
மருந்தகம், பால் கடைகள் தவிர்த்து 95 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். காவல்துறை தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் ஆலையை முற்றுகையிட சென்றதால், போலீசார் தடுத்து நிறுத்தி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/ba029a2d-695.jpg)
இதனுடன், போராட்ட அமைப்பினருக்கும் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டக் களத்தில் தங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் போன்ற உதவிப் பொருட்கள் போராட்ட குழுவினரால் வழங்கப்பட்டு வருகின்றன. போராட்டம் நடைபெறும் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மானாமதுரையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us