/indian-express-tamil/media/media_files/t0CPsXVuL0PaXYnQwLNW.jpg)
Sivangangai Youth Murder
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அவரது உறவினர்கள் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம். மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பிரவீன்குமார்(22). இவர் நேற்று இரவு கோயம்புத்தூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
மானாமதுரை பேருந்து நிலையத்தில் இருந்து அவரது நண்பர்கள் 3 பேருடன் இருசக்கர வாகனத்தில்கீழப்பசலை கிராமத்துக்கு சென்றுள்ளார். சங்கமங்கலம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் இவர்களை வழிமறித்து தாக்க முயற்சித்துள்ளனர். அப்போது 3 பேரும் தப்பிசெல்ல, பிரவீன்குமார் அந்தக் கும்பலிடம் சிக்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அவரது உறவினர்கள் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது pic.twitter.com/twPQFzZiAz
— Indian Express Tamil (@IeTamil) September 2, 2024
இதையடுத்து பிரவீன்குமாரை அந்த கும்பல் தீயனூர் பகுதிக்கு கொண்டு சென்று வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மானாமதுரை காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காகமானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து ஆத்திரம் அடைந்த பிரவீன் உறவினர்கள்மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் பார்வையிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.