3,000 லிட்டர் எரி சாராயம் எரிப்பு... மருத்துவக் கல்லூரிக்கு அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் 3000 லிட்டர் எரி சாராயத்தை ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
sivagangai medical college illicit liquor sarayam Tamil News

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் 3000 லிட்டர் எரி சாராயத்தை ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் 3000 லிட்டர் எரி சாராயத்தை ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

2024 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லிட்டருக்கும் மேற்பட்ட எரி சாராயம் குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் காவல் கண்காணிப்பில் இருந்தது.

இதனைச் சட்டப்படி அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று கூடுதல் எஸ்.பி. சுகுமாரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் செயல்பட்டு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகே பள்ளம் தோண்டி, பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயத்தை ஊற்றி தீ வைத்தனர்.

இச்சம்பவம் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் ஆபத்தான எரிபொருள் இவ்வாறு மருத்துவமனைக்கு அருகே எரிக்கப்பட்டது, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட அவசர நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. மருத்துவமனை அருகே தீவைத்தது குறித்த முன் ஆய்வோ, அறிவுறுத்தலோ இல்லாமல் நடந்ததா என்ற கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது.

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: