மானாமதுரை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, அதே ஊரை சேர்ந்த பழனி, மணி, சசிவர்ணம், லட்சுமணன், மூக்கன் மற்றும் முனியன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இவர்களை, மருத்துவ பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/01fa827b-53b.jpg)
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ராமு, பெற்றோர்கள் தாக்கியதில் காயமடைந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.