திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பிஎல் 2 பாக நிலை முகவர்கள் கூட்டம் திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; வருகிற 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தருகிறார். 10-ம் தேதி திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
கூட்டணி கட்சியினர் ஏதாவது பிரச்சனை என்றால் முதலமைச்சரிடம் தெரிவிப்பார்கள். உடனடியாக அதனை முதலமைச்சர் சரி செய்து வைப்பார். கட்சி தலைமையை பொறுத்தவரை ஆங்காங்கே கட்சியில் இருப்பவர்கள் அங்குள்ள பிரச்சனைகளை கூறுவார்கள். அதனை முதலமைச்சர் உடனடியாக சரி செய்து வைப்பார்.
தோழமை கட்சியினர் முதலமைச்சர் உடன் இணக்கமான முறையில் உள்ளனர். சிவகங்கை காவலாளி மரணம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார்.
க.சண்முகவடிவேல்