சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியில் நாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 13 வயது சிறுமி, அவரை காப்பாற்ற வந்த தாய் உட்பட 7 பேர் நாய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 15 நாட்களில் மட்டும் 25க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் பதற்றத்திலும் உள்ளனர்.
நாய் தொல்லை அதிகரித்து வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்