திருப்புவனம் இளைஞர் மரணம்: 5 போலீசார் கைது, வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்- டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் ஜூன் 30, 2025 அன்று இரவு கிடைத்தவுடன், எந்தவித காலதாமதமும் இன்றி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் ஜூன் 30, 2025 அன்று இரவு கிடைத்தவுடன், எந்தவித காலதாமதமும் இன்றி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivagangai youth custodial death

Sivagangai youth custodial death

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த 28 வயதான அஜித்குமார், ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 
 
இந்த சம்பவம் தொடர்பாக, நேற்று இரவு (ஜூன் 30) 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு போலீசார் உடனடியாக 28.06.2025 அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் (நேற்று) கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, . இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment
Advertisements

இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik SurakshaSanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், குற்ற எண். 303/2025 ல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்தகாலங்களை ஒப்பிடும்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 1) இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: